கண் திருஷ்டியால் பணம் கையில் தங்கவில்லையா! வீட்டு வாசலில் இந்த ஒரு பொருளை வைங்க!

0

கண் திருஷ்டியால் பணம் கையில் தங்கவில்லையா! வீட்டு வாசலில் இந்த ஒரு பொருளை வைங்க!

நம் முன்னோர்கள் ”கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்று கூறுவார்கள். மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு.

ஒருவரது வீட்டில் கண் திருஷ்டி இருந்தால் அவர்கள் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம், பொருள், செல்வம் என்பது நிற்கவே நிற்காது.

வரவிற்கு ஏற்ற செலவு வந்து சேரும். கடன் தொல்லை வந்து தொல்லை கொடுக்கும். கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு, ஒருவர் வீட்டில் நுழையும் அவர்களின் உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு.

உங்களுக்கு சாஸ்திரத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் பின் சொல்லக்கூடிய விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம்.

விநாயகர்
நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில், வெளிப்புறத்தை பார்த்தவாறு கற்பக விநாயகரின் திரு உருவப்படம் வைக்க வேண்டும். இதனால், கற்பக விநாயகரை பார்த்து விட்டு நம் வீட்டிற்குள் வருபவர்கள் கெட்ட எண்ணத்தோடு வரமாட்டார்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டியையும் நம் வீட்டிற்குள் நுழைய விடாது.

கற்றாழை செடியை காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் நிலை வாசலுக்கு வெளியே கட்டி வைக்க கூடிய பழக்கத்தை பின்பற்றி வந்தார்கள்.
வீட்டிற்கு முன்பு பூசணிக்காய், அரக்கர் உருவம் கொண்ட பொம்மைகளை வைப்பதை விட வாழை மரம் மற்றும் இன்னபிற செடிகளை வீட்டிற்கு முன்பாக நட்டு வளர்த்தால் உங்கள் வீட்டை பிறரின் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது.

வீட்டிற்கு வரும் நபர்களால் திருஷ்டி ஏற்படுவதைத் தவிர்க்க உருளி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாசம் மிக்க பொருட்களை அதில் போட்டு, மிதக்க விட்டு வீட்டின் நிலை வாசப்படி வெளியே வைக்க வேண்டும்.
சிறிய வெள்ளருக்கன் கட்டை மஞ்சள் கயிறு, கருப்பு கயிறில் கட்டி எல்லாம் தற்போது விற்கப்படுகிறது. அதை வாங்கி நிலை வாசலில் கட்டி வைத்தாலும் நமக்கு நன்மையை தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் கூடிவரும் ராசிக்காரர்கள் யார்! யாருக்கு கோடி நன்மைகள் கிடைக்கப்போகிறது!
Next articleSeptember 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 02