கண்மூடித்தனமான கோபம்! மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்! எதற்காக தெரியுமா?

0
356

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். விவாகரத்துக்கு விண்ணப்பித்து, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்துவந்த தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சுதாகர், ஆந்திராவை சேர்ந்த விமலா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சுதாகரின் மதுப்பழக்கத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குழந்தையின்மையை மருத்துவ ரீதியில் எவ்வாறு அணுகவது என்பதை யோசிக்காமல், இவர்களது கருத்து வேறுபாடு விவாகரத்து முடிவுக்கு கொண்டு சென்றது. நீதிமன்றத்தில் விண்ணப்பித்து விட்டு இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே, விவாகரத்து கிடைக்கும் வரை, விமலாவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சம் போன்று தறுமாறு சுதாகருக்கு பாதிரிவேடு காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

4 மாதங்களாக பணம் கொடுத்து வந்த சுதாகர் கடைசி 2 மாதமாக பணம் தரவில்லை. இதனால், இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை உருவாகி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சுதாகர் ஆக்சாபிளேடால் விமலாவின் கழுத்தை அறுத்தும், ஹெல்மெட்டால் தலையில் கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா அங்கேயே உயிரையும் விட்டார். உச்சக்கட்ட கோபத்தில் இருந்து வெளிவந்த பின்னர் தான், தாம் செய்த கொடூர செயலை உணர்ந்த சுதாகர் வேறுவழியின்றி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அதிக மதுப்பழக்கம், சந்தேக குணம், கட்டுக்கடங்கா கோபம் ஆகியவற்றால் இருவரின் வாழ்க்கை வீணானதை விட வேறு என்ன பயன் என்பதையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: