கல்உப்பு ஒரு வரப்பிரசாதம்! நினைத்தது பலிக்க கல் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்

0
8479

கல்உப்பு ஒரு வரப்பிரசாதம்! நினைத்தது பலிக்க கல் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்

கல்உப்பு – ஒரு வரப்பிரசாதம்! நீங்கள் நினைத்தது பலிக்க கல் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்!

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!

மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!

மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!

அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்! என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்

உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை. உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!

மனசுக்குள்ளயும் சொல்லலாம்! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.

முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!

நீங்களும் செஞ்சு பாருங்க! பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்.

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?

“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!

‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?

இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை என்று சொல்வாங்க!

எதிர்மறை சக்தி & நேர்மறை சக்தி இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது

உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள்!

கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!

இது மாயமோ, மந்திரமோ இல்லை! முற்றிலும் அறிவியல்!!

உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே அதிர்வுகளாக வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!

ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்! இதுவும் அறிவியல்தான்!

எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!

இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: