பொறுக்கமுடியாத குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா? வெற்றிலை சாற்றை இப்படி யூஸ் பண்ணுங்க!

0
8091

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும். வலியை போக்க இந்த வைத்தியத்தை செய்து பாருங்கள்.

தேவையானவை :

வசம்பு – 1 ஸ்பூன்

மஞ்சள் – 1 ஸ்பூன்

சுக்கு – 1 ஸ்பூன்

சித்தரத்தை – 1 ஸ்பூன்

செய்முறை
இவற்றை எல்லாம் எடுத்து பொடி செய்து அல்லது கடைகளில் பொடியாகவே வாங்கி முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

யூகலிப்டஸ் தைலம் :
கற்பூரவள்ளி தைலம் அல்லது யூகலிப்டஸ் தைலத்தை தடவி அரை மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: