கணவர் செய்த கொடுமைகளை கடிதமாக எழுதி இளம் பெண் ஒருவர் தற்கொலை

0
1176

கணவர் செய்த கொடுமைகளை கடிதமாக எழுதி இளம் பெண் ஒருவர் தற்கொலை

இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கணவர் செய்த கொடுமைகளை கடிதமாக அவர் எழுதியுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மர்மமாக இறந்து கிடந்த பெண்: தான் கொல்லப்படலாம் என முன்னரே எழுதிய கடிதம்

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூரை சேர்ந்தவர் பிரீத்தி குமாரி, திருமணமான இவர் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் மர்மமான சூழலில் இறந்து கிடந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து பிரீத்தியின் குடும்பத்தார் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசில் புகார் அளித்தனர். இதனிடையில், பிரீத்தி இறப்பதற்கு ஒருமாதத்துக்கு முன்பு தான் கொலை செய்யப்படலாம் என அவருக்கு தோன்றிய நிலையில் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கணவரும், மைத்துனரும் எப்படியெல்லாம் தன்னை கொடுமைப்படுத்தினார்கள் என எழுதியுள்ளார்.

கணவர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, சிகரெட் பிடிக்க வைத்ததாகவும், வாயை துணியால் கட்டி அடிப்பதாகவும் எழுதியுள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரீத்தியின் கணவர் மற்றும் மைத்துனரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: