கணவர் அனுமதியுடன் பாலியல் தொழில் செய்த மனைவி: அதிர்ச்சி காரணம்!

0
468

அமெரிக்காவில் போதை மருந்துகள் வாங்குவதற்காக பெண், பாலியல் தொழில் செய்து வந்த நிலையில் அதற்கு கணவரும் உடந்தையாக இருந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்கிராம் நகரை சேர்ந்தவர் லுகாஸ் ரோஜர் (27). இவர் மனைவி பிரிட்டனி பேட்ரிக் (26).

இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் பேட்ரிக் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் ஓன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைக்க பேட்ரிக் விளம்பரம் கொடுத்ததையும் பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் போல மாறுவேடத்தில் பொலிசார் பேட்ரிக் வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது வீட்டு வாசலில் இருந்த பேட்ரிக்கின் கணவர் லுகாஸ், பொலிசாரை உள்ளே அனுமதித்துள்ளார்.
இதையடுத்து அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பொலிசார் பேட்ரிக்கை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நான்கு மாதங்களாக ஹெராயின் எனப்படும் போதை மருந்துகள் வாங்குவதற்காக தான் விபச்சாரம் செய்வதாக பேட்ரிக் ஒப்பு கொண்டார்.

இதோடு மனைவி விபச்சாரம் செய்ய உதவியதாக லுகாஸுக்கும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: