கணவரை மூச்சு திணறடித்து கொன்றது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

0
487

தமிழ்நாட்டில் கணவரை திணறடித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி புஷ்பா (46). ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்

இந்நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு காலி இடத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். முகம் சாக்கு பையால் மூடப்பட்டு இருந்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய அவர்கள் விசாரணையை தொடங்கினர்.

புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் துருவி துருவி விசாரித்தனர்.

முதலில் நடந்ததை மறுத்தாலும் ஒரு கட்டத்தில் கணவரை கொன்றதை புஷ்பா ஒத்து கொண்டார்.

மது போதையில் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால் கணவரை புஷ்பா கொன்றது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தது.

குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவாதவராக இருந்து வந்த ராஜேந்திரனை புஷ்பா முற்றிலும் வெறுத்தார்.

ஆனால் சமீப காலமாக ராஜேந்திரன் புஷ்பா வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்துள்ளார்.

குடும்பத்துடன் சேர்ந்து வாழ ராஜேந்திரனுக்கு ஆசை இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாணிப்பவுடர் குடித்து விட்டு புஷ்பா வீட்டுக்கு ராஜேந்திரன் வந்துள்ளார்.

பின்னர் அவருடன் தகராறு செய்த ராஜேந்திரன் வீட்டுக்குள் உள்ள குளியலறைக்கு சென்று மயக்க நிலையில் பாதி உயிருடன் கிடந்தார்.

அவர் மீது ஆத்திரத்தில் இருந்த புஷ்பா சாக்கு பையை எடுத்து ராஜேந்திரனின் முகத்தை மூடி மூச்சை திணறடித்து கொன்றுள்ளார்.

பின்னர் ராஜேந்திரனின் உடலை துணியால் சுற்றி, கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போய் காலி இடத்தில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புஷ்பாவை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: