கணவரை பிரிந்துவிட்டதாக தகவல்! லண்டன் சென்று திரும்பியபோது கணவருடன் சண்டைபோட்ட ஐஸ்வர்யா ராய்!

0
566

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது.

இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும் ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Previous articleபொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட நண்பர்கள்!இளைஞரொருவருடன் விடுதிக்கு சென்ற யாழ் யுவதி!
Next articleசர்ச்சையை ஏற்படுத்திய பெண்களின் தகவல்கள் அம்பலம்! இலங்கை கிரிக்கெட் வீரரின் நண்பரின் உல்லாசம்!