கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்! சேவைகள் முடக்கம் – பயணிகள் தவிப்பு!

0
295

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் தொடர் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக, விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்க ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரியே ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளமையினால் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: