கட்டுநாயக்கவில் இரகசியமாக தரையிறங்கிய விமானம்!

0
313

காட்டுநாயக்க விமான நிலையத்தில் பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த விமானம் ஒன்று தரித்து நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் இருக்கின்ற அந்த விமானத்தை இலங்கை சுங்கப் பிரிவோ விமானப் படையினரோ பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். திருகோணமலையில் அமைக்கப்பட உள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்காக கொண்டு வரப்பட்ட உபகரணங்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்பட உள்ளதாக பொதுஜன பெரமுனவால் பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என்று தெரிவித்ததாகவும் எஸ்.எம். சந்திரசேன கூறினார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளிவரும் உண்மைகள்! மகிந்தவின் மருமகள் தமிழ்!
Next articleரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி எளிதில் குணப்படுத்தக் கூடிய இயற்கை வைத்தியங்கள்!