சர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் நேற்றிரவு கருத்து தெரிவித்த ரஜினி,
தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும் திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்றும் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ரஜினிகாந்த் முதன்முறையாக எதிர்த்துப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: