மூட்டு மூட்டாக வலி உயிர் போகிறதா..? முழங்கால்,இடுப்பு வலியா இதோ தீர்வு! இந்த பானம் போதுமானது!

0
11136

உடலிலேயே முழங்கால் மூட்டுக்கள் மிகவும் பெரிய மற்றும் சிக்கலான மூட்டுக்கள் ஆகும்.முழங்கால் எலும்புகள் தசைநார்களால் இணைக்கப்படுகின்றன. இதனால் முழங்கால்களுக்கு ஸ்திரத்தன்மை வழங்கப்படுகிறது. மேலும் தசை நார்கள் முழங்கால் எலும்புகளை கால் தசைகளுடன் இணைத்து, முழங்கால் மூட்டுக்களின் அசைவிற்கு உதவுகிறது.

உடலில் முழங்கால் மூட்டுக்கள் சிக்கலான ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவர் நடப்பதற்கு, ஓடுவதற்கு, நிற்பதற்கு, குதிப்பதற்கு என அனத்து செயல்பாட்டிலும் முழங்கால் மூட்டுக்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வயது அதிகரிக்கும் போது முழங்கால் மூட்டுக்கள் தேய்மானம் அடைய ஆரம்பித்து கடுமையான முழங்கால் மூட்டு வலியை உண்டாக்கும். ஒருவரது முழங்காலின் வலிமை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகப்படியான உடல் பருமன், ஓய்வின்றி கால்களுக்கு நீண்ட நேரம் அழுத்தத்தைக் கொடுப்பது, கால்சியம் குறைபாடு, தசைநார்களில் ஏற்பட்ட காயங்கள், கடுமையான உடற்பயிற்சி, விளையாட்டுக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் முழங்கால் மூட்டுக்களில் ஏற்பட்ட காயங்களால் சந்திக்கும் வலியைக் குறைக்க ஓர் அற்புத பானம் உள்ளது.

இந்த பானத்தை ஒருவர் குடித்து வந்தால், அது முழங்கால் தசைநார்களுக்கு வலிமை அளித்து, மூட்டு வலயை நீக்க உதவும். உங்களுக்கு அந்த பானம் என்னவென்றும், அதை எப்படி தயாரிப்பது என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்

தேவையான பொருட்கள்:

அன்னாசி துண்டுகள் – 2 கப்

தேன் – 2 1/2 டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்

ஓட்ஸ் – 1 கப்

பாதாம் – 2 1/2 டேபிள் ஸ்பூன்

பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

செய்முறை:

* முதலில் ஓட்ஸை எப்போதும் போன்று சாதாரணமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது சுடுநீரை ஊற்றி, குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதில் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பாதாமை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்ஸியில் ஆரஞ்சு ஜூஸ், தேன், தண்ணீர் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் ஓட்ஸை சேர்த்து சில நிமிடங்கள் அரைத்துக் கொள்ள வேண்டும். * இந்த பானத்தை தினமும் குடித்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

குறிப்பு

இந்த பானத்தை ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், 15 நாட்களில் இதுவரை மூட்டுக்களில் சந்தித்து வந்த வலி முற்றிலும் நீங்கி, இனிமேல் முழங்கால் மூட்டு வலி வராமல் தடுக்கப்படும்

இதன் விளைவாக அன்றாட செயல்பாடுகளில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளும் நீங்கும். இப்போது மூட்டு விலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் இதர சில வழிகளைக் காண்போம்.

வழி #1 சீன வைத்தியத்தின் படி, கேரட்டுகள் முழங்கால் மூட்டு வலியில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துமாம். அதற்கு 2 கேரட்டுகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் கேரட்டுகள் தசைநார்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, முழங்கால் மூட்டு வலியும் குறையும்.

வழி #2 முழங்கால் மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய இயற்கை வழி என்றால், தினமும் இரவில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை சாப்பிடுங்கள். இதனால் மூட்டுக்களில் உள்ள காயங்கள் வேகமாக குணமாகி, வலியில் இருந்தும் விடுபடலாம்.

வழி #3 வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளுடனான பைட்டோ கெமிக்கல்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டும். வெங்காயத்தில் உள்ள சல்பர், முழங்கால் மூட்டுக்களில் உள்ள வலியைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

வழி #4 2 டீஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 5 பூண்டு பற்களைப் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெயைக் கொண்டு வலியுள்ள முழங்கால் மூட்டு பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வாருங்கள்.இதனால் முழங்கால் மூட்டுக்களில் உள்ள அழற்சி குறைந்து, கால் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசை நார்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும்.

வழி #5 1 கப் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெயை வலிமிக்க முழங்கால் பகுதியில் தடவி மசாஜ் செய்து வர, முழங்காலில் இரத்த ஓட்டம் தூண்டிவிடப்பட்டு, முழங்கால் மூட்டு வலி குறையும்.

வழி #6 அனைத்து வகையான வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் மிகவும் பிரபலமான ஓர் வழி தான் இது. 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால், எப்பேற்பட்ட வலியும் பறந்தோடும்.

வழி #7 2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வலிமிக்க முழங்கால் பகுதியைச் சுற்றித் தடவுங்கள். இப்படி தினமும் வலிமிக்க பகுதியில் இப்படி செய்து வந்தால், வலி விரைவில் குணமாகும்.

வழி #8 மஞ்சள் மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது. இது ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும். அதற்கு 3 கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் இஞ்சி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் கலந்து, தினமும் 2 முறை குடித்து வந்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: