இந்தியாவில் கடவுள் ஹனுமனின் மறுபிறவி என்று 13 வயது சிறுவனை அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் தொட்டு கும்பிட்டு செல்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Sadiq Shah(32)-Nazma(30). இஸ்லாமியர்களான இவர்களுக்கு Sohail Shah என்ற 13 வயது மகன் உள்ளார்.
Sohail Shah பிறக்கும் போது அவரின் முதுகெலும்பில் நீண்டகாலமாக வால் போன்று முடி வளர்ந்து வந்துள்ளது. இதைக் கண்ட அக்கிராம மக்கள் அனைவரும் Bajrangi Bhaijan என்று ஹனுமனின் மறுபிறவி என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய சிறுவனாக இருந்தாலும், அங்கிருக்கும் கிராம மக்கள் சிலர் சிறுவனிடம் வந்து தினந்தோறும் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
சிறுவனை பார்க்க வரும் மக்கள் வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்றவைகளை காணிக்கையாக கொடுப்பார்கள் எனவும், அவர்களுக்கு சிறுவன் ஆசிர்வாதம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் முதுகின் பின்னால் சுமார் ஒன்றரை அடி நீளத்திற்கு வால் போன்று முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது என்பது தெரியவில்லை. மருத்துவர்களோ நரம்பு குழாய் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் இது குறித்து எந்த ஒரு கவலையும் படாமல், அதை நீக்குவது குறித்து எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் வருகின்றனர்.
ஏனெனில் தங்கள் மகனை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், இந்து மக்கள் கடவுளை எப்படி வணங்குவார்கள் என்பது தெரியு. இது அவனுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளார்.
சிறுவன் Sohail Shah கூறுகையில், இதைப் பற்றி நான் கவலைப்பட்டது இல்லை எனவும் நான் நடந்து சென்றால் சிலர் ஆசிர்வதிக்கும் படி கூறுவர், அதன் பின் பழங்கள் வாங்கித் தருவர்.
இதனால் தற்போது வரை எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன் என்று சிரித்த படி கூறியுள்ளார்.
மேலும் இந்த சிறுவனை பார்ப்பதற்கு அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.