கடனாக கொடுத்த பணம் திரும்ப வரவில்லையா! இதை செய்தால் போதுமாம்!

0

ஒரு சிலருக்கு ஏற்படுகின்ற பேராசையின் காரணமாக பிறரின் பணம், சொத்து, பொருட்கள் போன்றவற்றை ஏமாற்றி அபகரிக்கின்றனர். வேறு சிலர் அவற்றை கடனாக பெற்று திருப்பி தராமல் ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய சிக்கல்களை போக்க நமது முன்னோர்கள் கூறிய ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை இங்கு காணலாம்.

ஒரு வீட்டின் தெற்கு பகுதி வாஸ்து சாஸ்திர படி, செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்தும் திசையாக இருக்கிறது. செவ்வாய் பகவான் தீமைகளை அழிக்கின்ற நவகிரக நாயகன் ஆவார்.

உங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் ஒரு காலியான இடத்தில், ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிக்குள்ளாக 7 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பிறகு தூபங்களை கொளுத்தி, தீபங்களுக்கு ஆராதனை காட்டி உங்கள் குல தெய்வம் மற்றும் செவ்வாய் பகவானை மனிதில் நினைத்து வணங்க வேண்டும்.

நமது முன்னோர்கள் நமக்கு அருளிய இந்த தாந்திரீக முறையை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களிடம் கடன் பெற்று ஏமாற்றியவர்களும், ஏமாற்ற முயல்பவர்களும் உங்களின் பணத்தை உங்களிடத்தில் சீக்கிரத்தில் வந்து கொடுப்பார்கள். உறவினர்கள் சொத்தில் உங்களுக்கான பாகத்தை தராமல் ஏமாற்றியது, கவனக்குறைவால் திருடுபோன பொருட்கள் போன்றவையும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியான அதிர்ச்சித் தகவல்கள்! யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்!
Next articleயாழ்ப்பாணத்தை சென்றடைந்தது உத்தர தேவி!