கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0
271

கடகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் 7-வது வீட்டில் நுழைந்து என்ன பலன் தரப் போகிறார் என்று பதற்றப்படாதீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகளும் அலைச்சலும் வரும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பணத்தைத் தாராளமாகச் செலவு செய்யாமல் உங்களுக்காகவும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். தந்தை வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து போகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்கவைப்பதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: