கேக் ஓடர் செய்வோர் இந்த செய்தியை கட்டாயம் பாருங்கள். அதிர்ந்துபோய் விடுவீர்கள்.
ஜோர்ஜியாவை சேர்ந்த ரெனா டேவிட் என்ற பெண் தனது திருமணத்திற்காக ஓடர் செய்த கேக், மிகவும் விகாரணமாக வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண், அழகிய மயில் ஒன்று தோகை விரித்து அமர்ந்திருப்பது போன்று கேக் ஒன்றை பேக்கரியில் ஓடர் செய்திருக்கின்றார்.
குறித்த கேக்கு இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 53 ௦௦௦ பணமும் செலுத்தி இருந்துள்ளார்.
இந்தநிலையில், திருமண நாளுக்கான கேக்கும் வந்தது அதை பார்த்த அந்த பெண்ணுக்கும் உறவினர்களுக்கும் பேரதிர்ச்சி. ஏன் என்றால், அவர் ஓடர் செய்த கேக் தொழுநோய் வந்த வான்கோழி போன்றே வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அந்த பெண் கேக்கு தான் வழங்கிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது அந்த பேக்கரி உரிமையாளர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார்.
உடனே அந்த மோசமான கேக்கை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, வேறு வழியின்றி பணத்தை திருப்பி கொடுத்தாராம் அந்த பேக்கரி உரிமையாளர்.