ஒரே ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்வது ஆபத்தா?

0
2208

திருமணத்திற்காக ஆண் அல்லது பெண் பார்க்கும் போது, ஒரே ராசியில் இருந்தால், திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்று ஜோதிடத்தில் கூறுவார்கள் அல்லவா?

அந்த வகையில் எந்தெந்த ராசிகளை உடையவர்கள் திருமணம் செய்யக் கூடாது அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்
மேஷம் ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் உறவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். ஏனெனில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவு வந்துக் கொண்டே இருக்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இருவர்களின் மத்தியில் நல்ல இணைப்பு உண்டாகும். இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான கருத்து, வழி, ஐடியா, ஈடுபாடு இருப்பதால், இந்த ஜோடிகள் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக பணியாற்றும் திறன் கொண்டிருப்பார்கள்.

மிதுனம்
மிதுனம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இருவர்களின் மத்தியில் பெரிதான ஈர்ப்பு ஏற்படாது. இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், ஒருவர் சமநிலை இன்றி காணப்படுவார்கள்.

கடகம்
கடகம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் அதிக உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மத்தியிலான உணர்ச்சி வெளிபாடு அதிகமாக இருக்கும். ஒருவர் மற்றொருவருடைய உணர்வை புரிந்து நடந்துக் கொள்வார்கள்.

சிம்மம்
சிம்மம் ராசியைக் கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் இருவரையும் மற்றவர்கள் பரிந்துரைக்க அச்சம் கொள்ளும் ஜோடியாக இருப்பார்கள். இவர்களின் மத்தியில் அதிக முன்கோபம் இருப்பதால், ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமைக் காப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இருவர் மத்தியில் ஈர்ப்பும், பிணைப்பும் அதிகமாக இருக்கும். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாக திகழ்வார்கள்.

துலாம்
துலாம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை ஒப்பு கொண்டு வெளிப்படையாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் மத்தியில் இது சிறந்த குணமாக இருந்தாலும், இவர்களின் உறவு பிரிவை தேடி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்
விருச்சிகம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் வாழ்வில் நம்பிக்கை, பொறாமை, சந்தேகம் போன்றவை உறவில் விரிசல் ஏற்பட செய்யலாம். இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.

தனுசு
தனுசு ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவருடன் ஒருவர் அதிக நேரத்தை செலவழித்து கொள்ள விரும்புவார்கள். மேலும் இவர்கள் இருவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் சிறந்து விளங்குவார்கள்.

மகரம்
மகரம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்பவராக இருப்பதால், இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும். எனவே இந்த ஜோடிகள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.

கும்பம்
கும்பம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்துக் கொண்டால், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.

மீனம்
மீனம் ராசியை கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவருமே இருவேறு பார்வைகள் கொண்ட ஒரே கனவை ஏந்தி பயணிக்கும். தனித்துவம் வாய்ந்த ஜோடியாக விளங்குவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: