ஒரே நேரத்தில் ஒரே விடுதியில் வவுனியாவில் ஐந்து தம்பதியினர்

0
434

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு வைபவம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் அறியவருவதாவது,

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன் உள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் ஐந்து புதுமணத் தம்பதியினருக்கு வரவேற்பு வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதிதாக திருமணம் முடித்த ஐந்து புதுமணத் தம்பதிகளின் நண்பர்கள் ஒரே நேரத்தில் ஐந்து தம்பதிகளையும் ஒரே இடத்தில் வரவேற்று விருந்து உபசாரத்தையும் மேற்கொண்டுள்ளனர்

இவ்வாறு ஐந்து தம்பதிகளையும் ஒரே இடத்தில் வரவேற்பு நிகழ்வுகளை செய்ததென்பது வவுனியாவிலேயே இதுவே முதல் தடைவை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: