ஒரே நாளில் மூட்டுவலியை விரட்டியடிக்க‌ செய்யும் நாட்டு வைத்தியம்!

0
2428

மூட்டு வலி வயதானவர்களுக்குதான் வரும் என்பது அந்த காலம். 20 களின் இறுதியில் 30 களின் தொடக்கத்திலேயே பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதர்கு முக்கிய காரணம் என்னவா இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? . ஒரு பெரிய காரணம் என்ன தெரியுமா? நடக்காம இருப்பதுதான்..

நீங்கள் ஒரு நாளை எத்தனை கிலோமீட்டர் நடக்கிறீர்கள்? வேண்டாம்.. எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்கள். வீட்டை விட்டு இறங்கினால் வண்டி. ஏறுவதற்கு லிஃப்ட். நடப்பது என்பது அதிசமயமாகிவிட்டது. நீங்கள் நடக்க நடக்கதான் உங்கள் மூட்டைச் சுற்றியும் இருக்கும் தசை நார்கள் இறுகும். மூட்டைச் சுற்றியிருக்கும் திரவம் நன்றாக சுரக்கும். இதனால் மூட்டு தேய்மானம் தடுக்கபப்டும்.

ஆனால் இப்போது நடப்பது குறைத்தீர்களென்றால், பிறகு மூட்டு வலி வந்தவுடன் எப்போதும் நடக்க முடியாதபடி ஆகிவிடும்.

அதுபோல் லேசான மூட்டு வலி வரும்போது, அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால், தாங்க முடியாத பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்திடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மூட்டுகளை திடப்படுத்தி, மூட்டுவலியை காணாமல் போகச் செய்யும் ஒரு மருந்தை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். மூட்டு வலிகளுக்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வைத்தியங்களையும் காணலாம்.

தேவையானவை :

கல் உப்பு – 1 கப்

நல்லெண்ணெய் – 1 கப்

தயாரிக்கும் முறை :
தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதில் கல் உப்பைப் போட்டு ஒரு மரக் கரண்டியால் நன்றாக கலக்குங்கள். உப்பும் எண்ணெயும் நன்றாக சேர வேண்டும். பின்னர் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இறுக்கமாக மூடி வைத்திடுங்கள். 8 நாட்களுக்கு அதிகம் வெளிச்சமில்லாத இடத்தில் வைத்திடுங்கள்.

பயன்படுத்தும் முறை :
இந்த எண்ணெயை 8 நாட்களுக்கு பின் தேவையான அளவு எடுத்து லேசாக சூடு பண்ணி, மூட்டுப் பகுதியில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் தர வேண்டும்.

நன்மைகள் :
இந்த எண்ணெய் மூட்டைச் சுற்றியிருக்கும் தசை மற்றும் இணைப்புகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மூட்டில் இருக்கும் இறுக்கத்தை குறைகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. ஓரிரு நாட்களில் மூட்டு வலி குறைந்துவிடும்.

கல் உப்பின் நன்மைகள் :
பொதுவாகவே கல் உப்பு, வீக்கங்களை குறைக்க பயன்படுகிறது. அந்த காலங்களில் சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கு கல் உப்பையே பயன்படுத்துவார்கள். இது வலி மற்றும் வீக்கத்தை குறைந்துவிடும். திசுக்களின் பாதிப்பை சரி செய்கிறது.

நல்லெண்ணெயின் நன்மைகள் :
வாரம் ஒரு நாள் நல்லெண்ணெயால் மசாஜ் செய்து குளித்து வந்தால் எலும்புகள் பலம் பெறும் என காலங்காலமாக சொல்லிவருகின்றனர். இவை மூட்டுகளின் இணைப்புச் சவ்வுகளில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறட்சி ஏற்படாமலும் காக்கிறது. இதிலுள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மூட்டுத் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூட்டு பலமாக இருக்க குடிக்க வேண்டிய பானம் :

தேவையானவை :

வேக வைத்த ஓட்ஸ்- 1கப்

நீர்- 1கப்

அன்னாசி சாறு – 1 கப்

ஆரஞ்சு சாறு – 1 கப்

தேன்- 2 ஸ்பூன்

பட்டைப் பொடி – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :
மேற்கூறிய எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மூன்று சம அளவாக பிரித்து காலை, மதியம், இரவு என குடித்தால் உங்கள் மூட்டு பலம் பெறும். பிற்காலத்தில் மூட்டு வலி வராது.

ஆர்த்ரைடிஸ் வராமல் தடுக்கும் பானம்
வயதான பின் எலும்புகளின் பலவீனத்தால் ஆர்த்ரைடிஸ் எனபப்படும் முடக்கு வாதம் உருவாகிறது. இதனை தடுக்க இந்த ஜூஸை வாரம் இருமுறை குடியுங்கள்.

தேவையானவை :

குப்பை மேனி இலைகள் – ஒரு கைப்பிடி

நீர்- 1 லிட்டர்

எலுமிச்சை சாறு – 1 மூடி

தேன் – 8 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :
ஒரு லிட்டர் நீரில் குப்பை மேனி இலைகளை பொடியாக நறுக்கி போடுங்கள். இதனை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பாக ஆறிய பின் வடிகட்டி அந்த நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள் :
மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது. மூட்டு இணைப்புகளில் இருக்கும் பாதிப்புகளை குணப்படுத்துகிறது. தேன் மற்றும் எலுமிச்சை சாறு நச்சுக்களை அகற்றும். மூட்டுகளில் படியும் படிகாரங்களை எலுமிச்சை கரைக்கிறது. இதனால் மூட்டுகளில் இருக்கும் இறுக்கம் குறையும்.

மூட்டை பலப்படுத்தும் மசாஜ் :

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு.

தயாரிக்கும் முறை :
ஆலிவ் எண்ணெயை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி அதில் 1 ஸ்பூன் அளவு அல்லது 3ல் ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து கொள்ளுங்கள். ஒரு பஞ்சினால் சூடான எண்ணெயை நனைத்து மூட்டுகளில் தடவுங்கள். தினமும் இரவு செய்து கொண்டு படுத்தால் மூட்டு வலி குறைவதை காண்பீர்கள்.

நன்மைகள் :
ஆப்பிள் சைடர் வினிகர்மூட்டுகளில் தங்கியிருக்கும் நச்சுத்தன்மையை அகற்றுகிறது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு பலம் தருகிறது. இவையிரண்டும் வேகமாக மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

மூட்டு வலி வருவதற்கு காரணம் என்ன?

உடல் எடை :
50 சதவீதத்திற்கும் மேல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு காரணம் உடல் பருமன் தான். தலை முதல் தொடை வர உள்ள மொத்த பாரங்களும் மூட்டின் மீது குவிவதால், மூட்டு வலி உண்டாகி இறுதியில் தேய்மானத்திற்கு வழிவகுக்கின்றது.

குறைவான எண்ணெய் பயன்படுத்துதல் :
ஆமாம். சிலர் மிகக் குறைவாக அல்லது எண்ணெயே இல்லாமல் சமைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எண்ணெயே உபயோகிக்கக் கூடாது என எந்த மருத்துவத்திலும் சொல்லவில்லை.

உடலுக்கு தேவையான கொழுப்பு, எண்னெயிலிருந்து பெறப்பெடுகிறது. கொழுப்பு அமிலங்கள் அதிகமாக எண்ணெயில்தான் கிடைக்கின்றது. இவைதான் மூட்டுச் சவ்வை பாதுகாக்கின்றது. சூரிய காந்தி எண்ணெய், கடலென்ணெய், நல்லென்ணெய் ஆகியவ்ற்றை கட்டாயம் உணவில் சேர்த்திடுங்கள்.

சூரியனை தவிர்த்தல் :
இன்றைய காலக்கட்டத்தில் சூரியனை குழந்தைகள் பார்ப்பதே அரிது. அதுவும் காலைச் சூரியன் நம் உடலில் படாத போது விட்டமின் டி நமக்கு கிடைப்பதில்லை. விட்டமின் டியே கால்சியம் தயாரிக்க உதவுகிறது என்பதை நினைவில் கொள்க.

நடை பயிற்சி இல்லாதது :
குறைந்தது அரை கிலோமீட்டராவது நடக்க வேண்டும் என மனதில் உறுதி கொள்ளுங்கள். இதனால் ஒட்டுமோத்த உடலுகும் எலும்பிற்கும் நன்மை கிடைத்திடும். தசை மற்றும் எலும்புகளுக்கு தேவையான பயிற்சி கிடைப்பதால் பலம் பெறும்.

பால் பொருட்கள் சாப்பிடாதது :
பால், மோர், தயிர் என எந்த பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடாத போது அவற்றால் கால்சியம் பற்றாக் குறை வர வாய்ப்புண்டு. குறிப்பாக மோரை பாலை விட இருமடங்கு கால்சியம் கிடைக்கிறது. ஆகவே கட்டாயம் தயிர், பால் போன்ரவற்றை தினசரி உணவில் சேர்த்த்துக் கொள்ளுங்கள். பால் அலர்ஜி இருப்பவர்கள் கீரையை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும்.

மூட்டை பலப்படுத்தும் உணவுகள் :
புருக்கோலி, எள்ளு, வெங்காயம், அனைத்துவித கீரைகள், எண்ணெய், பால் வகைகள், போன்றவை உங்கள் மூட்டு மற்றும் மூட்டு இணைப்புகளை பலப்படுத்தும் உணவுகள். இவற்றை கட்டாயம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மூட்டு வலி வந்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

சோள எண்ணெய் :
சோள எண்ணெயில் அதிக ஒமேகா 3 அமிலம் இருப்பதால் அவை மூட்டு வலியை இன்னும் அதிகரிக்கச் செய்திடும். ஆகவே சோள எண்ணெயை பயன்படுத்துவதை தவிருங்கள்

தக்காளி:
தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை:
மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள் இது. ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.

தானியங்கள்:
கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைக்கும் கருணைக்கிழங்கு!
Next articleமூட்டை பூச்சிகளை ஒரே நாளில் வீட்டிலே விரட்டுவ‌துக்கான இயற்கை வழிகள்.