ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, நான்கு மகள்கள் பலியான பரிதாபம்!

0
390

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் நான்கு மகள்கள் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் Audie Trinidad, இவரது தன்னுடைய மனைவி மற்றும் நான்கு மகள்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர்நேரப்படி 4 மணியளவில் Newark நகரின், Route 1 சாலையில் டிரக்கின் மீது மூன்று கார்கள் தொடர்ச்சியாக மோதியது.

இதில் ஒரு காரில் பயணித்த தந்தை உட்பட நான்கு மகள்களும் பரிதாபமாக பலியாகினர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், டிரக்கின் ஓட்டுநருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஓசியன் சிட்டி-க்கு சுற்றுலா சென்று திரும்பிய போதே இக்கோர விபத்து நிகழ்ந்ததாக Audie Trinidad-ன் சகோதரர் தெரிவித்துள்ளார்.

கடவுள் மீது தன் சகோதரருக்கு அதீத நம்பிக்கை உண்டு என்றும், கண்மூடி திறப்பதற்குள் நடந்த இச்சம்பவத்தால் உருக்குலைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை அடையாளம் கூட காணமுடியாத அளவு இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: