ஒரு நாளைக்கு 2 முறை தடவுங்க மூட்டு வலி பறந்தோடிவிடும் அருமையான தகவல்!

0
5511

தற்போது ஏராளமானோர் அன்றாட செயல்களை செய்ய முடியாமல் மூட்டு வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூட்டு வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றால் அவர் மாத்திரைகளை கொடுத்து நம் வயிற்றை புண்ணாக்கி விடுகிறார்கள்.

ஆனால் மூட்டு வலிக்கு ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. இக்கட்டுரையில் அந்த அற்புத வலிக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் – 1 கப்
வரமிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
வரமிளகாய் பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட் செய்யும் போது வெறும் கைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

செய்முறை #2

கையுறைகளை அணிந்து கொண்டு, வலியுள்ள மூட்டுப் பகுதியில் தடவ வேண்டும். ஒருவேளை பயங்கரமாக எரிச்சலை அனுபவித்தால், உடனே நீரில் கழுவி விடுங்கள். இல்லாவிட்டால், அடுத்த முறையைப் பின்பற்றுங்கள்.

செய்முறை #3

15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையைப் பின்பற்றிய பின், கைகளை முகம் அல்லது கண்களுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை என தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றினால், மூட்டு வலி பறந்தோடிவிடும்.

இம்முறை எப்படி வேலை செய்கிறது?
வரமிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், வலி நிவாரணி போன்று செயல்படும். இதனால் தான் மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

கேப்சைசின் என்ன செய்கிறது?
கேப்சைசின் மூளைக்கு வலி சமிக்கையை அனுப்பும் குறிப்பிட்ட கெமிக்கல்களை அழித்து, வலியைக் குறைக்கும். மேலும் நாம் பயன்படுத்தும் பல வலி நிவாரண க்ரீம்களிலும் இந்த பொருள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை!
மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
காயங்கள் இருந்தால், இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: