உங்க வீட்டில குழந்தைகள் இருக்கா? இருந்தா கண்டிப்பா படியுங்க, இல்லனா நண்பர்களுக்கு பகிருங்கள்!

0
23741

ஒரு குழந்தையின் வாழ்வின் முதல் நான்கைந்து வருடங்களில் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித் துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.

பொருட்களைப்பயன்படுத்தி அலங்காரமாக கட்டப்பட்ட இடமாக மட்டும் வீடுகள் இருக்காமல் அங்கு மனிதர்கள் வாழும் அழகான இடமாக அது இருக்க வேண்டும். ‘உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என வில்லியம் சேக்ஸ்பியர் சொன்னதை இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை.

எல்லாக் குழந்தைகளுக்குமே பிறந்ததும் மஞ்சள் காமாலை லேசாக இருக்கும். முகம், நெஞ்சு, கண்கள் லேசாக மஞ்சளாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை (கடைகளில் விற்கப்படும் எண்ணெய் இல்லை) உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேறிவிடும்.

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் வெற்றிலைச் சாறு, தாயப்பால், கோரோஜனை ஒரு அரிசி எடை அளவு கலந்து புகட்டினால் சளி இருந்தால் வெளியேறிவிடும்.

ஏழாம் நாள் துளசிச்சாறு எடுத்து தாய்ப்பாலில் கலந்து புகட்டினால் சளி கரையும். குழந்தைக்கு தலைக்குக் குளிப்பாட்டும் போது கொடுக்க (11ம் நாள்) சுக்கு, சித்தரத்தை, ஜாதிக் காய், மாசிக்காய் எல்லாவற்றையும் பாலில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த சாமான்களை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தையைத் தலைக்குக் குளிப்பாட்டியவுடன் ஒரு சந்தனக் கல்லில் பாலில் வேக வைத்த இந்தச் சாமான்களை ஒரு முறை இழைத்து தாய்ப்பால் சேர்த்து (ஒரு கட்டிப் சுத்தமான பெருங்காயத்தையும் (100கிராம் ருபாய் 1000 முதல் 1400 இருக்கும்) இந்தச் சாமான்களுடன் வைத்துக் கொள்ளவும்.) பெருங்காயத்தையும் ஒரு இழை இழைத்து எல்லாவற்றையும் சேர்த்துப் புகட்டலாம்.

சுக்கு வாயுவைக் கலைக்கும் – சித்தரத்தை சளி பிடிக்காது – ஜாதிக்காய் தூக்கம் வரும் மாசிக்காய் பேதி ஆகாது – காயம் வாயுவைக் கலைக்கும்.

குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் போடலாம்.

வசம்பு வாங்கி வந்து உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். “குழந்தை வயிற்று வலியால் ” அழுதால் சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்து தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் போட்டு சிறிது தேன் கலந்து, நன்கு குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.

கொய்யா இலையை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால், பேதி நின்றுவிடும்.(இது பெரியவர்களுக்கும் பொருந்தும்).

வெண் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, ஓமம், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு, ஒரு துணியில் சிறுசிறு வில்லைகளாகப் பிழிந்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வில்லையை எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்தால் வெந்து விடும். கீழே இறக்கி வைத்து சிறிது நாட்டு பசும் பால், சுத்தமான நாட்டு சர்க்கரை சேர்த்து ஊட்டினால் குழந்தை புஷ்டியாக வளரும்.

ஆறு மாதக் குழந்தைக்கு, வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து, வடி கட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி வராது.கேழ்வரகு இரண்டு ஸ்பூன் முதல் நாள் ராத்திரி ஊற வைத்து, மறுநாள் காலை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலைப் போட்டு கைவிடாமல் கிளறி (2 நிமிடம்) இறக்கவும். பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும்.

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்து நெஞ்சில் தடவினால், சளி இளகிக் கரைந்து விடும். தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு, வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு, சும்மா கலகலவென்று இருக்கும்.

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை, மலம் கழிக்க வேண்டும். கஷ்டப்பட்டால், ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை, வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால், ஒரு மணி நேரத்தில் மலம் போய்விடும். ஆசனவாயில், வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய வைத்தாலே வெளியே வந்து விடும்.

குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.பசியால் அழுகிறதா அல்லது வாயு (காஸ்) -ஆல் அழுகிறதா என்று பார்க்க வேண்டும்.ஒவ்வொரு முறை பால் கொடுத்தபிறகு குழந்தையை தோளில் போட்டு மெதுவாக தட்டி கொடுக்கவேண்டும்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந்தத்தை அளிக்கும். `மசாஜ்’ மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும்.

உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண்டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.(குழந்தைக்கு பவுடர் பூசுவதை தவிர்கவும்).

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு பல நோய்களின் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் குழந்தைகளுக்கு தங்கத்தை கல்லில் உரைத்து அதில் தேன் சேர்த்து, அக்குழந்தையின் நாக்கில் வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. தங்கம் ஆஸ்துமா மற்றும் பல வகை சுவாசக் குறைபாடுகள் மற்றும் இதயம், மூளை குறைபாடுகளையும் குணப்படுத்த வல்லது.

வெள்ளி செரிமான பிரச்னைகள் மட்டுமல்லாமல் தொற்று நோய்களையும் தடுக்கவல்லது. வெள்ளி கெட்ட பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், முன்னோர்கள், பால் கெடாமல் பாதுகாக்க, அதில் வெள்ளி காசுகளை போட்டு வைப்பார்களாம். ஆனால் இவை சாமானியர்களுக்கு சாத்தியமில்லை.

ஒரு வருடம் நெருங்கும் போது குழந்தை இரவில் தூங்காமல் நெளிந்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருக்குமேயானால் அதற்கு வயிற்றில் பூச்சி உள்ளது என்று அர்த்தம். ஆற்றுதும்பட்டிக்காய் மற்றும் கருஞ்சீரகத்தை அரைத்து வயிற்றில் பூசி அரைமணி நேரத்திற்கும் பின் குளிப்பாட்டி விட பூச்சி அகலும்..( எனது அனுபவம்)

குழந்தையை எப்போதும் யாராவது தூக்கி வைத்துக் கொண்டே இருப்பதைத் தவிர்க்கவேண்டும். இதை , ‘ஓவர் ஸ்டிமுலேஷன்’ என்போம். எப்போதும் 10 பேர் மாற்றி மாற்றித் தூக்கிக் கொஞ்சுவதும், பேசுவதும் கூடாது. அதற்காக, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சாமல் தொட்டிலிலேயே போட்டு வைப்பதும் கூடாது (அண்டர் ஸ்டிமுலேஷன் ).இதனால், குழந்தை சோர்ந்து விடும்; அல்லது பிடிபடாமல் அழும். கைக்குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதற்கு, பெரும்பாலும் இதுதான் காரணம். ஜீரணப் பிரச்னை என்று நினைத்து, பல தாய்மார்கள் தங்களுடைய உணவை மாற்றுவார்கள். சிலர், மாற்றுப் பால் கொடுக்க முயற்சிப்பார்கள். அது தேவையல்ல.

2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின் தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட ஐம்பது சதவீதம் பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8% குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.

குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு டையாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகின்றது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச்செய்து பிரசவக் காலத்து உதிரப் போக்கிலிருந்து தாயைக் காக்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும்.

இது எனது அனுபவத்தில் உணர்ந்து.ஏன் என்றால் என் குழந்தை பிறந்து பத்து மாதம் தான் ஆகிறது.. என் மனைவி கர்ப்பிணியாக இருந்த போது எந்த ஒரு ஆங்கில மருந்தும் எடுத்துக் கொள்ள வில்லை இது வரைக்கும் குழந்தைக்கு எந்ந ஒரு தடுப்பூசியும் போட வில்லை..மருத்துவ மனைக்கும் சென்றதில்லை.

பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது,

எனது எல்லா பதிவையும் பொறுமையாக படியுங்கள்.

1.குழந்தைகள் தலைபொடுகுக்கு
சீயக்காய் 250 கிராம், செம்பருத்தி இலை காய்வு 250 கிராம், வெந்தயம் 100 கிராம், இம்மூன்றையும் பவுடராக்கி வாரம் மூன்று முறை தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கி விடும்.

2. குழந்தைகளின் விதை வீக்கத்திற்கு
நொச்சி இலை 10 கிராம், வெள்ளைப் பூண்டு 5 பல்லு, முட்டை வெண்கரு ½ பாகம், களச்சிகாய் 5 கிராம் சேர்த்து அரைத்து விதை பாகத்தில் போட்டு வர வீக்கம் வத்தும்.

3. குழந்தைகளுக்கு நீர் கடுப்பு, எரிச்சல் இருந்தால்
அதிமதுரத்தையும், இலவங்கப் பட்டையையும் பொடித்து தேனில் குழைத்து கொடுத்து வர குணமாகும்.

4. குழந்தைகளுக்கு பேதியானால்
சிறிது வசம்பை சுட்டுப் பொடியாக்கி தண்ணீர் அல்லது பாலில் கலக்கி கொடுக்க பேதி நிற்கும்.

5. குழந்தைகளுக்கு கட்டி வந்தால்
எருக்கம் பாலில் மஞ்சளை அரைத்து போட்டு வர கட்டிகள் உடைத்து விடும்.

6. காலில் கரப்பான் வந்தால்
செம்பருத்தி இலை சாற்றில், காட்டு சீரகத்தை அரைத்துப் போட குணமாகும்.

7. குழந்தைகளுக்கு அக்கி வந்தால்
எருமை தயிரில் ஊமத்தன் இலை சாற்றை அரைத்துப் பூச குணமாகும்.

8. பால் உண்ணிக்கு
சிகப்பு நாயுரி இலை, வாஷிங் சோடா, சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து மேலால் போட பால் உண்ணி போய் விடும்.

9. வயிற்றுப் போக்கு
ஜாதிக்காய் 10 கிராம், கசகசா 100 கிராம், இரண்டையும் நன்கு அரைத்து பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி அத்துடன் நெய், தேன் சிறிய அளவு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிற்றுப் போக்கு மாறி உடல் தேறும்.

10. டான்சில் – தொண்டை புண்ணுக்கு
திருநீற்று பச்சிலையுடன் சிறிது வறுத்த மிளகு சேர்த்து அரைத்து தொண்டையில் தடவி வர டான்சில் குணமாகும்.

11. சொரி சிறங்கு நமச்சல் இருந்தால்
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் காட்டு கஸ்தூரி விதையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க குணமாகும்.

12. குழந்தைகளுக்கு சளி இருமல் இருந்தால்
கற்பூரவல்லி இலைசாறும் தேனும், சமன் கலந்து காலை மாலை சங்களவு கொடுக்க குணமாகும்.

13. சுண்ணாம்பு வாயில் பட்டால்
தேங்காயை நன்கு அரைத்து வாயில் தடவவும்.

14. வயிற்றுப் வலிக்கு
1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் பொடித்து மோருடன் கலந்து கொடுக்கவும்.

15. குழந்தைகளுக்கு ஏற்படும் புண்களுக்கு
இலந்தை தொலியை நன்கு பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் போட்டு வர புண் ஆறும்.

16. குழந்தைகள் மலம் கழிய
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மலம் சரியாக கழியாவிட்டால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். மகிழம் விதையை மைபோல் அரைத்து ஒரு சிறு துணி திரியில் அதைத் தடவி மல வாசலில் வைத்தால் உடன் மலம் கழியும்.

17. குழந்தைகளுக்கு மலம் நாற்றமாக போனால்
வயல் வரப்புகளில் கிடைக்கும் பொடுதலையின் காய், இந்துப்பு, 2 பூண்டு, மிளகு சம அளவு எடுத்து வறுத்து இடித்து குடிநீர் செய்து கொடுக்க மாறும்.

18. குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் இருந்தால்
கிராம்பு, கருவப்பட்டை, ஏலம், நிலவேம்பு கசாயம் செய்து சங்களவு காலை – மாலை கொடுக்க குணமாகும்.

19.அவுரி இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும். இதன் இலையை அரைத்து விளக்கெண்ணெயுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் எனப்படுகிறது.

குழந்தைகளின் மொழி அழுகை ஒன்றே..எதற்காக அழுகிறது என்று தெரிந்து அதற்கு தக்கவாறு நடந்துக்கொள்ள வேண்டும். பசித்து புசி என்பார்கள் இதை சிறுவயதில் இருந்தே பழக்கமாக்க வேண்டும். உணவு கொடுக்கும் போது தண்ணீர் ஊட்டி உணவை புகட்டுவதை தவிருங்கள்.

குழந்தை உணவு புகட்டும்போது அந்த குழந்தை தலையை வேண்டாம் என்று திருப்பினால் கட்டாயப்படுத்தி ஊட்ட வேண்டாம்.சிறிது இடைவெளி விட்டு ஊட்டுங்கள்.

குழந்தை இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்.

1.கடுக்காய்
2.மாசிக்காய்
3.ஈஸ்வர மூலி வேர்
4.ஜாதிக்காய்
5.சிட்டாமணுக்கு எண்ணெய்
6.வசம்பு
7.ஓமம்
8.நார் சுக்கு
9.வெத்தலை கொடி
10.திருநீர்பச்சிலை
11.துளசி
12.கொம்புத்தேன்
13.முதல் தர சாம்பிராணி
14.குங்கிலியம்
15.கோஸ்டம்
16.வெண் கடுகு
17.நொச்சி செடி
18.ஆடாதொடை செடி
19.விஷ்ணுகிராந்தி ( விடாத ஜொரத்திற்கு விஷ்ணுகிராந்தி)
20.வெள்ளை மிளகு
21.கற்பூரவல்லி
22.பச்சை கற்பூரம்
23.கருஞ்சீரகம்
24.சுத்தமான தேங்காய் எண்ணெய்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: