ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பது ஆபத்தா!

0
4239

ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் என்ன நடக்கும்? அதற்கு ஏதேனும் பரிகாரங்கள் உள்ளதா? என்ற குழப்பம் நம்மில் பலரிடத்திலும் இருக்கும்.

ஆனால் உண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே ராசியில் இருக்கக் கூடாது என்று ஜாதகம் கூறுகிறது.

மேலும் ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேர் ஏக ராசியாக அமையும் பட்சத்தில், அந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதன் மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஒரே ராசி இருப்பதால் ஏற்படும் ஆபத்து என்ன?
ஒரு குடும்பத்தில் ஒரே ராசி உள்ள பலர் இருந்தால், ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் மோசமான சூழ்நிலையின் போது பாதிப்பு ஏற்படலாம்.

இதனால் அந்த குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவுகள், பிரிவு, பொருள் இழப்புகள், விபத்து போன்று அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பரிகாரம் என்ன?
கடலோரம் உள்ள கோவில்கள் எனப்படும் சம்ஹார ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்று நம் முன்னோர்கள் பழைய நூலில் கணித்து வைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

மேலும் பிரதி வாரம் சனிக்கிழமை நவகிரங்களுக்கு எள் விளக்கிட்டு, 27 முறை சுற்றி வந்தால், கிரகங்களின் தாக்கம் குறையும்.

ஏழரைச் சனிம் அஷ்டம சனி நடக்கும் நேரத்தில் குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் பிரிந்து இருப்பது நல்லது. மேலும் வாகனம் ஓட்டும் போது, கவனமாக இருப்பதுடன், ஒரே வண்டியில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: