ஒரு அதிர்ச்சி செய்தி! இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்ட 700 குழந்தைகள்! கடத்தி வரப்பட்டார்களா?

0
394

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 11,000 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 700 பேர் சுவிட்சர்லாந்திலுள்ள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தனை பெற்றோர்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளை எப்படி தத்துக் கொடுக்க முன்வந்தார்கள்?

எதற்காக தத்துக் கொடுக்க முன்வந்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில்!

அந்த குழந்தைகளில் பலர் தங்கள் பெற்றோரால் தத்துக் கொடுக்கப்படவில்லை, அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டு நெதர்லாந்து தொலைக்காட்சி ஒன்று, இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சுவிஸ் அதிகாரிகள், இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் தொடர்புடைய திட்டம் குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் கேலன் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Martin Klöti, சுவிட்சர்லாந்திலுள்ள தம்பதிகள் தத்தெடுத்த இலங்கை குழந்தைகள், தங்கள் சொந்த பெற்றோரை கண்டுபிடிக்க உதவுவது அவசியம் என்கிறார்.

1948 முதல் சமூக நல ஆர்வலரான ஆலிஸ் ஹொனேகர் மற்றும் வழக்கறிஞரான ருக்மணி தவநேசன் ஆகியோர் நடத்தி வந்த தனியார் தத்தெடுப்பு திட்டம் ஒன்று, சட்டப்படியே நடத்தப்பட்டு வந்ததாகவும், அப்போது விசாரணை அதிகாரிகளாக இருந்தவர்களும்கூட அந்த காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களின்படி தவறேதும் இழைக்கவில்லை என்று தெரிவித்தார்.

1980ஆம் ஆண்டு ஹொனேகர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் இண்டர்போல் அவர்மீது குற்றம் எதுவும் இல்லை என்று கூறி அவரை விடுவித்துவிட்டது.

ஆனாலும், அதே காலகட்டத்தில் குழந்தைகளை கடத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏராளம் இருந்ததால், அந்த திட்டம் இன்னும் கவனமாக கையாளப்பட்டிருக்கப்பட வேண்டும் என்கிறார் Klöti.

1997ஆம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டபோது அந்த சட்ட நிலை மாறியது.

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, அந்த தத்தெடுப்பு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் அதிகாரிகள், கடந்த காலத்தில் நடந்தவை குறித்து கணக்குக் கேட்கப்படுவது அவசியம் என்பதோடு, தத்துக் கொடுக்கப்பட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் தங்கள் உண்மையான பெற்றோர் யார் என அறிந்துகொள்ள உதவுவதும் அவசியம் என்றும் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி எளிதில் குணப்படுத்தக் கூடிய இயற்கை வைத்தியங்கள்!
Next articleயாழில் மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் மாப்பிள்ளை!