ஒயின் குடித்து சர்க்கரை நோயை விரட்டுங்க! எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?

0
957

சில பொருள்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதற்கு காரணம், அதை நாம் அதிகளவு உபயோகப்படுத்துவது தான்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எதையுமே அளவுடன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆல்கஹாலை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சிறிதளவு மட்டுமே குடிப்பதால் டைப் 2 சக்கரை நோயிலிருந்து தப்பிக்க முடியும்.

ஆய்வு
வயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் பலமுறை நடத்தப்பட்டன.

இதில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு மிக சிறிதளவு ஒயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பானது 30% வரை குறைந்துள்ளதாம்.
வாரத்தில் எத்தனை முறை
பெண்கள் வாரத்தில் 7 முறையும், ஆண்கள் 14 முறைகளும் மிக சிறிதளவு மட்டுமே ஒய்ன் குடிப்பதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதே உண்மை.

ரெட் ஒய்ன்
ரெட் ஒய்னில் உள்ள பாலிப்பினால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைப்பதே சக்கரை நோய் கட்டுப்படுவதற்கான காரணமாக உள்ளது.

பீர்
பீர் குடிப்பதும் சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் இது ஆண்களுக்கு மட்டுமே பலன் தரும் ஒன்றாக உள்ளது. இது பெண்களை சக்கரை நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றாது.

50 விதமான பாதிப்புகள்
ஆல்கஹால் குடிப்பதால் 50 விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு சில நன்மைகளும் உண்டாகின்றன. ஆல்கஹாலை பெண்கள் மிக சிறிதளவு குடித்தால் கூட மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

எனவே ஆல்கஹாலில் சில நிறைகளும் உள்ளன. குறைகளும் உள்ளன. இது நாம் எடுத்துக்கொள்ளும் அளவை பொறுத்தது.

இது வேண்டாம்
இருப்பினும், நீங்கள் ஆரோக்கியத்திற்காக ஆல்கஹாலை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்க முடியாது. எந்த மருத்துவர்களும் சர்க்கரை வியாதியின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆல்கஹாலை கையில் எடுக்க சொல்லமாட்டார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: