உடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற இந்த டீயை ஒரு கப் குடிங்க!

0
5666

ஒட்டுண்ணிகள் மற்ற உயிரினங்களின் உடலில் புகுந்து உயிர் வாழும். இது மனிதர்களை மட்டுமின்றி மிருகங்களின் உடலினுள்ளும் வாழும். ஒருவரது உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் பல கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் நிறைய பேர் பல்வேறு வகையான ஒட்டுண்ணிப் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அந்த புழுக்கள் ஒருவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கர தொற்றுக்களை உண்டாக்கி அவஸ்தைப்படச் செய்யும்.

உடலினுள் புழுக்கள் இருப்பதை எப்படி அறிவது?

உடலில் அரிப்புக்களுடன் காய்ச்சல்
வீக்கம்
வாந்தி
அசாதாரண அல்லது தீவிர தலைவலி
வேகமான இதய துடிப்பு
மங்கலான பார்வை
மூச்சு விடுவதில் சிரமம்
ஒரு வாரத்திற்கும் மேலான இருமல்

ஒட்டுண்ணி தொற்றுகளை எளிய இயற்கை முறையில் அழிக்க முடியுமா?

உடலில் ஒட்டுண்ணி தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், ஒரு சக்தி வாய்ந்த மருத்துகுணம் கொண்ட டீயை தயாரித்து குடித்து வாருங்கள். இதனால் புழுக்கள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும்.

டீ செய்ய தேவையான பொருட்கள்:

பூண்டு – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு

டீ தயாரிக்கும் முறை:

முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டினால், டீ ரெடி!

பருகும் நேரம்

இந்த டீயை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் உடலில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் அழித்து வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: