ஒடும் ரெயிலில் உறவினரை தாக்கி விட்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

0
823

புதுடெல்லியில் சஹரம்பூர் பயணிகள் ரயிலில், 16 வயதான 9-ம் வகுப்பு மாணவி தனது உறவினர் ஒருவருடன் பயணித்துள்ளார்.அப்போது, ரயிலில் இருந்த மூன்று இளைஞர்கள் மாணவியின் உறவினரை தாக்கிவிட்டு, அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இதுகுறித்து ரயில்வே காவல்துறை பெண் போலீஸ் அதிகாரி கிரண் ராஜ் கூறுகையில்,

‘9ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது நிரம்பிய மாணவி ஒருவர், தேர்வு முடிவை தெரிந்துகொண்டு பள்ளியிலிருந்து ரெயிலில் தனது உறவினருடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த ரெயில் பெட்டியில் அவர்கள் இருவருடன், மூன்று இளைஞர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞர்கள் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினரை அவர்கள் தாக்கினர். பின்னர், அவரை தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொண்ட அவர்கள், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் வீடு திரும்பிய அம்மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மூன்று இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மோஹித் என்பவர் ஆவார். ஆனால், மற்ற இருவரான பூபேந்தர் மற்றும் வினித் ஆகியோர் இப்போது வரை கைதுசெய்யப்படவில்லை. அதேநேரம், அவர்கள் வீடுகளில் தேடும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: