ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை அரசுக்கு எதிராக வெளியிடபட்ட‌ காணொளி!

0

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை அரசுக்கு எதிராக வெளியிடபட்ட‌ காணொளி!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த காணொளியில் போர் கால சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் எனக் கூறப்படுகிறது.

ஆதாரம்: தமிழ்வின்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 02.02.2021 Today Rasi Palan 02-02-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleநடைபெறவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்வில் இசைக்கப்படும் தேசிய கீதத்தில் தமிழ் மொழிக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது ! வெளியானது அறிவிப்பு !