ஐஸ்வர்யா ராய் செய்த மோசமான காரியம்… ஒரே வீட்டில் கணவரை பிரிந்து வாழ்கிறாரா?

0
846

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும், நடிப்பை தொடர்ந்த இவர் குழந்தை பிறந்ததிற்கு பின்பு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து “ஏதில் ஹே முஷ்கில்’ படத்தின் மூலம் மிகவும் ஹாட் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொணடார். அப்போது அவரிடம் ‘உங்கள் கணவரின் போனை ரகசியமாக பார்த்துள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஐஸ்வர்யா ராய் ‘ஒரு போதும் நான் அதை செய்தது இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

இருப்பினும், பாலிவுட் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் மீது கொண்ட சந்தேகத்தால் அவருடைய கைபேசியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பார்த்ததாகவும், இதனால் இவர் மீது ஏற்பட்ட கோபத்தினாலும், கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இருவரும் ஒரே வீட்டிலேயே பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு மாமியார் மருமகள் சண்டையால் நடிகை ஐஸ்வர்யா ராய் அடிக்கடி அவர் அம்மா வீட்டுடன் இருப்பதாகவும், இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: