இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும், வாக்கெடுப்பை சபையில் நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியம் இன்றைய தினம் விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதவசியம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண தாமதிக்காமல் இலங்கை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: