ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில், கவுதம் மேனனின் “கார்த்திக் டயல் செய்த எண்‍- குறும்படம்” !

0
265

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில், கவுதம் மேனனின் “கார்த்திக் டயல் செய்த எண்‍- குறும்படம்” !

கவுதம் மேனன் திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார். காதல் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர்

தற்போது மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள “கார்த்திக் டயல் செய்த எண்” என்னும் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த குறும்படம்
12 நிமிட கதை, சிம்பு – திரிஷா இடையே நடக்கும் செல்போன் உரையாடல்களை “கொஞ்சம் விழிப்புணர்வு மற்றும் நிறைய காதலுடன்” கொடுத்துள்ளார் கவுதம் மேனன்.

இக்குறும்படத்தை பார்க்கும் போது “விண்ணைத்தாண்டி வருவாயா 2” எப்போது வரும்? என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அதன் ஒரு பகுதியை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த குறும்படத்தின் வசனங்களை சிம்பு படித்துவிட்டு கண்கலங்கியதாக சொல்லப்பட்டது. மேலும் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இதற்கு வலு சேர்த்திருக்கிறது. பார்த்து ரசிக்கும் படி அழகாக உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன். மொத்தத்தில் “விண்ணைத்தாண்டி வருவாயா 2 ” பார்த்த திருப்தி வந்துவிடும் என்றே சொல்லலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: