ஏ.ஆர். முருகதாஸின் வெப் தொடரில் வாணி போஜன்.

0

ஏ.ஆர். முருகதாஸின் வெப் தொடரில் வாணி போஜன்.

வாணி போஜன் தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். பின்னர் ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கிறார்.

ஓ மை கடவுளே படம் மூலமாக வரவேற்பை பெற்ற வாணிபோஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்!
Next articleமாதம் 29ஆம் தேதி முதல்… கொரோனா சம்மந்தமாக ஜோதிடச் சிறுவன் வெளியிட்ட அடுத்த தகவல்!