என் மகளையாவது விடுங்க – கதறி அழுத தாய்: கண்டு கொள்ளாமல் வன்கொடுமை செய்த காமுகன்!

0
504

மத்தியபிரதேசம் – உத்திரபிரதேசம் இடையில் இருக்கும் பகுதி கங்காபூர். இங்கு ஒரு பெண் தன் கணவரை இழந்து தன் 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தன் மகளுடன் கஷ்டப்பட்டு வந்த அப்பெண், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று ஒருவன் கூறியதை கேட்டு, ரூ.35,000 த்தை வாங்கிக்கொண்டு சூரத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தான் அந்த நபரின் கொடூரமான முகம் வெளிபட்டுள்ளது. அப்பெண்ணை அவன் ஒரு வீட்டிற்குள் வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அதற்கு பணியாத அப்பெண்ணிடம், உன் மகளை கொன்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, தனக்கு தெரிந்த மற்றொரு நபருடன் பெண்ணின் மகள் 11 வயது சிறுமி என்றும் பார்க்காமல் தாய் முன்பே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

”ஐயோ என் மகளையாவது விட்டுவிடுங்கள்” என்று அப்பெண் கதறி அழுத போதும், அதை கேட்காத அந்த காமுகன்கள் சிறுமியை சீரழித்துள்ளனர்.

இதையடுத்து 4 நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 86 முறை கட்டையால் அடித்து கொன்றுள்ளனர். சிறுமியின் உடலை பக்கத்தில் இருந்த கிரிக்கெட் மைதானத்தில் போட்டு சென்றுள்ளனர்.

சிறுமியின் உடலை கண்ட பொலிசார் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயின் உடலை தேடியதில், பெண் ஒருவரின் சடலம் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டு டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பொலிசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த நாட்களுக்கு முன்புதான் ஆசிஃபாவின் கொடுர செயல் நடந்துள்ள அடுத்த வாரமே இந்த கொடுரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கு இந்நாட்டில் பல கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசியலும், சட்டமும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: