என் மகனுக்கு அந்த குழந்தை பிறக்கவில்லை! மருமகள் ரகசியத்தை கண்டுப்பிடித்த மாமியார்! நேர்ந்த விபரீத சம்பவம்!

0

இந்தியாவில் இரண்டு பேருக்கு பணம் கொடுத்து தனது மாமியாரை கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்தவர் சத்னர் கவுர். இவருக்கு ஜக்மோகன் சிங் மற்றும் மன்மோகன் சிங் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜக்மோகன் சிங்கின் மனைவி ஹர்ஜோத். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

மன்மோகன் சிங் கனடாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜக்மோகன் கடந்த 2017-ல் உயிரிழந்துவிட்டார்.

இதன் பின்னர் ஹர்ஜோத்தும் அவர் மாமியார் சத்னரும் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் மாமியார், மருமகள் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடனில் இருந்த ஹர்ஜோத் தனது மாமியார் சத்னரின் சொத்துக்கள் அனைத்தையும் அடைய நினைத்தார்.

இந்த சூழலில் தான் விக்ரம் என்பவருடன் ஹர்ஜோத்துக்கு பழக்கம் ஏற்பட்டது, இதை அவர் மாமியார் சத்னர் கண்டுபிடித்த நிலையில் அவரை கண்டித்து வந்தார்.

மேலும் ஹர்ஜோத்துக்கு பிறந்த குழந்தைக்கு தனது மகன் ஜக்மோகன் தந்தை கிடையாது என பலரிடமும் சத்னர் கூறிவந்தார்.

இதனால் மாமியார் சத்னர் மீது ஹர்ஜோத் கோபத்தில் இருந்து வந்தார்.

இதனால் மாமியார் சொத்துக்களை அடையவும், அவரை பழிவாங்கவும் திட்டமிட்ட ஹர்ஜோத் விக்ரம் மூலம் அவரை கொல்ல முடிவு செய்து இதற்காக ரூ 1500 பணத்தை அவருக்கு கொடுத்தார்.

இதையடுத்து விக்ரம் தனது தோழி அஞ்சு ராணியை உதவிக்கு அழைத்து கொண்டு ஹர்ஜோத் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்த சத்னரை மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

இதன்பின்னர் விக்ரமும், அஞ்சுவும் அங்கிருந்து தப்பித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சத்னரின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் மருமகள் ஹர்ஜோத்திடம் விசாரித்தனர். ஆனால் மாமியார் எப்படி இறந்தார் என தனக்கு தெரியாது என அவர் கூறினார்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிசிவி கமெரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்தபோது விக்ரம் மற்றும் அஞ்சு சம்பவம் நடந்த வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

இது குறித்து ஹர்ஜோத்திடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அனைத்தையும் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்துவிட்டு, இது குறித்த தகவலை கனடாவில் இருக்கும் சத்னரின் இரண்டாவது மகன் மன்மோகனுக்கு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல ரிவியில் ஆண் பெண் என இரு குரலில் பாடி அசத்தும் திருநங்கை! பிரம்மித்து போன பார்வையாளர்கள்!
Next articleகுளிர்காலத்தில் சருமம் கருப்பாக்காமல் தடுக்க!