என் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன்! விளையாட்டாக வந்த விதி! தாயின் கதறல்!

0
442

சென்னை திருவான்மியூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மரப்பெட்டிக்குள் சென்று அமர்ந்துகொண்டதில் அது தானாக மூடிக்கொண்டதில் மூச்சுதிணறி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி – புவனேஸ்வரி தம்பதியினருக்கு தனுஸ்ரீ (8), சாருலதா (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் தனியாக வீட்டில் இருப்பது வழக்கம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே தனுஸ்ரீயும் சாருலதாவும் இருந்தனர்.

சிறுமிகள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கையில் வீட்டிலிருந்த மரப்பெட்டிக்குள் இருவரும் சென்று ஒளிந்துகொண்டனர். உள்ளே சிறுமிகள் ஒளிந்துகொண்டதில் மரப்பெட்டி அசைந்து தானாக மூடிக்கொண்டது.

சிறுமிகள் இருவரும் அலறிய சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த தாய் புவனேஸ்வரி, குழந்தைகளை காணவில்லை என தேடியுள்ளனர். பின்னர் மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து குழந்தைகள் இருவரும் மயங்கி நிலையில் இருப்பதை பார்த்து கதறியுள்ளார்,

இதனைத்தொடர்ந்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூத்த மகள் இறந்துவிட்டார், இரண்டாவது மகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.

இதற்கிடையில் சாருலதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், “மரப்பெட்டிக்குள் இரண்டு குழந்தைகளும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தனுஸ்ரீ மூச்சுத்திணறி பலியாகிவிட்டார். சாருலதா உயிரோடு பிழைத்தது கடவுளின் கருணை என்றே சொல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

குழந்தைகள் விளையாடிய மரப்பெட்டி 4 அடி உயரம் இருக்கும். 3 அடி வரை அகலம் இருக்கும், இந்த பெட்டியை தான வேலை பார்க்கும் இடத்தில் இருந்து தாய் புவனேஸ்வரி வீட்டுக்கு கொண்டு வைத்திருந்துள்ளார்.

என் குழந்தையின் உயிரை பறிக்கவா மரப்பெட்டியை வீட்டுக்கு கொண்டு வந்தேன் என அவர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிசேஷங்களுக்கு கட்டப்படும் வாழைமரம்! இதற்கும், குருவிற்கும் என்ன சந்பந்தம்!
Next articleஉலகிலேயே மிக அழகிய கையெழுத்து கொண்ட கையில்லா சிறுமி! வியக்க வைக்கும் சாதனை! குவியும் பாரட்டுக்கள்!