என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்? சிறையில் யாஷிகா!

0
381

நேற்று பொன்னம்பலம் சிறைத்தண்டனை அனுபவித்து அதன் பின்னர் விடுதலையாகியுள்ள நிலையில் இன்று யாஷிகாவை பிக்பாஸ் சிறையில் தள்ளியுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, காயத்ரி மட்டுமே பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகினர். ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இன்னும் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.

குறிப்பாக மகத், ஷாரிக், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் நால்வரில் யார் எவிக்சனுக்கு வந்தாலும் அவர்கள் விரப்படுவார்கள் என்பது உறுதி .

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் யாஷிகா சிறையில் உள்ளார். பொன்னம்பலம் சர்ச்சைக்குரிய வகையில் கூறியதாக அந்த ஒரு மேட்டரை வைத்தே மகத், யாஷிகா இன்றைய புரமோவில் பேசி வருகின்றனர்.

கடைசியில் யாஷிகா சிறையில் இருப்பது போன்று அந்த புரமோ வீடியோ முடிகிறது. இன்று சிறையின் உள்ளே இருக்கும் யாஷிகா வரும் ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டின் வெளியே செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: