என்ன ஆனது தெரியுமா? 7 மாதத்தில் 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 1 தலைமையாசிரியர் என மாறி மாறி கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

0
810

பிஹாரில் பள்ளி மாணவியை சக மாணவர்களும், தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களும் 7 மாதங்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் சமீபகாலமாகவே பள்ளி மாணவியர், இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2017-ம் ஆண்டில் மொத்தம் 1,198 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 289 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாப்ராவில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை மொபைல் போனில் படம் எடுத்த அவர்கள், அதை காட்டியே அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

பின்னர் மேலும் சில மாணவர்களும், அவரை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியின் தந்தை வேறு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் வீட்டில் நிலவிய சோகமான சூழல் காரணமாக தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் உள்ள மற்றவர்களிடம் அந்த மாணவி சொல்லவில்லை.

சக மாணவர்களின் அராஜகம் அத்துமீறியதால் வேறு வழியின்றி தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி மாணவி அழுதுள்ளார்.

இதை கேட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களை வரவழைத்து அவர்களிடம் இருந்த மொபைல் போன் காட்சிகளை பார்த்துவிட்டு,

தலைமை ஆசிரியரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சில நாட்களுக்கு பின் தலைமையாசிருக்கு நெருக்கமான சில ஆசிரியர்களும் அந்த மாணவியை அதேபோல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுபோல கடந்த 7 மாதங்களாக அந்த மாணவியை தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள், 15 மாணவர்கள் பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அந்த மாணவியின் தந்தை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அதன் பிறகு மாணவி, தந்தையிடம் நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். மாணவியின் புகாரின் பேரில் தற்போது தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: