எதிர்பாராத பரிசு எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் தெரியுமா? விடியும் பொழுது காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

0

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்
வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மிதுனம்
குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்
விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

சிம்மம்
நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்

துலாம்
சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்
உற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்
காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

மீனம்
காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த உணவுகளில் நம் உடல் பாகங்களின் நச்சுக்களை அகற்றும் தன்மை அதிகமாக உள்ளது ! இவற்றை அதிகம் உணவில் சேருங்க!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 16.11.2018 வெள்ளிக்கிழமை!