எச்சரிக்கை சர்க்கரை நோயை கவனிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்!

0
1173

இன்றைய உலகில் எமது வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவு முறை மாற்றத்தாலும் சர்க்கரை நோய் அதிகமாகி கொண்டிருக்கிறது.

சர்க்கரை வியாதி இரண்டு வகை ஒன்று இரத்தத்தில் குளுகோஸை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்காமலேயே போனால் அது டைப் 1

கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும், ஆனால் மிக குறைவாக இருப்பது டைப் 2 . சர்க்கரை

நோய்யினை கட்டுபாட்டில் வைப்பதற்கு உணவு முறை மாற்றம் அவசியம்.

இதனை அறிந்து கொள்வது எப்படி என்றால் உடலில் சில மாற்றங்கள் உண்டாவதை உணரலாம். அதாவது ​அதிகமான தாகம் வறட்சி இருக்கும், ​சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு,சோர்வு, சருமத்தில் அரிப்பு , கால் எாிவு மற்றும் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனை நாம் கவனிக்காமல் விட்டால் பின்வரும் பாதிப்புக்களை எதிா்கொள்ள நோிடும்.

கண் பார்வை மங்கும் : சர்க்கரை வியாதியால் உண்டாகும் ரெட்டினோபதி என்னும் பார்வை திறன் குறையும் நோய் உண்டாகும்.

கொலஸ்ட்ரால் : இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது, நல்ல கொழுப்பான HDL குறைந்துவிடுவதால் அதிக ரத்த அழுத்தம் உண்டாகி பக்க வாதம் மற்றும் கொலஸ்ட்ரால் வர வாய்ப்புகள் உண்டாகும்.

சிறு நீரகம் பழுதாகும் :இரத்தத்தில் அதிகரிக்கும் குளுகோஸால் ரத்தம் அடர்த்தியாகும். இதனால் சிறு நீரகத்திலுள்ள நெஃப்ரானால் ரத்தத்தை சுத்திகாிக்கமுடியாமல் போவதால் புரோட்டின் வெளியேறிவிடும். இதனை கவனிக்காமல் அப்படியே விட்டால் 5 வருடங்களில் சிறு நீரகம் பாதித்துவிடும்.

பாதத்தை இழக்க நேரிடலாம் : இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் பாதம் மரத்துப் போய் விடும் சிறிய காயம் காலில் ஏற்பட்டால் குணமாதலில் தாமதம் ஏற்படும் ,இதனால் புண்கள் பொிதாகி காலை இழக்கும் நிலை ஏற்படும்.

இதய நோய்கள் : அதிக குளுகோஸ், ரத்த அழுத்தம் காரணமாக இதயத்தில் ரத்த ஓட்டத்தை குறைத்துவிடுவதால் ஹார்ட் அட்டாக், பக்க வாதம், மற்றும் இதய நோய்களை உண்டாக்கும்.

நரம்புகள் பாதிக்கும் :மூட்டுக்களில் வலி , வீக்கம் கை கால்களில் நடுக்கம் உண்டாகும்.

வாழ் நாள் குறையும் : சர்க்கரை நோயாளிகள் சாதரணமாக சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் வாழும் வாழ் நாளைவிட 13 வருடங்கள் குறைவாகவே அவா்களால் வாழ முடியும்.

சாதாரண நோயில் இறக்கும் மக்கள் தொகையில், சர்க்கரை வியாதியால் உண்டாகும் இறப்பு 7 வது இடம் பிடித்துள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: