தேவையான போது உயிரணுக்களை சுரக்கவும், தேவையற்றபோது நிறுத்தி வைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பிராட்போர்டு மற்றும் லீடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
இதயத்தின் செயல்பாடுகளை இயக்கப் பயன்படும் புரத மூலக்கூறுகளான சிடிசிஎஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இனி யாருக்காவது உயிரணு, கருமுட்டை உற்பத்தியில் அல்லது இயக்கத்தில் குறைபாடுகள் இருந்தால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண முடியும்.
அதுபோல தானாக உயிரணுக்கள் வெளியேறுவது போன்ற குறைபாட்டுக்கும் முடிவு கட்டலாம்.
இதன் மூலம் மனித குலத்தின் அடிப்படை அம்சங்களை மறுஉற்பத்தி செய்து உள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.