உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பமா, உதயமானது அஜித் திராவிட முன்னேற்ற கழகம்!

0
293

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பமா, உதயமானது அஜித் திராவிட முன்னேற்ற கழகம்!

அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒருவர் போஸ்டர் அடித்தும், உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்க போகிறார் என்றும் தமிழகத்தில் பயங்கர பரபரப்பை போகிறார் உள்ளார். மேலும், இதன் மூலம் தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதற்காக ஏற்பாடு என்ற தகவல் வந்து உள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் பயங்கர கொந்தளிப்பில் உள்ளார்கள்.

சில ஆண்டுகளாகவே உள்ளாட்சி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தவுடன் அரசியல் கட்சிகள் வேலை, வேட்பு மனு தாக்கல், கட்சி கூட்டணியை சேர்த்து, கட்சி கூட்டணி வேலைகள் என பல வேலைகளில் இறங்கி உள்ளனர் அரசியல்வாதிகள்.

மேலும், மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் மறைமுகமாக நடைபெறும் என்றும் தமிழக அரசால் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 28 தீர்மானங்களை நிறைவேற்றினார். மேலும், இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் பேசியது, உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெற வேண்டும்.

அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். இதனை தொடர்ந்து உங்களை மேயர் ,நகராட்சி பெரும் தலைவர்களாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதையடுத்து பொதுக்குழுவில் வேண்டும் கொண்ட நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளார்கள். இந்நிலையில் மதுரை மாநகரில் அதிமுகவை சேர்ந்த ரைட் சுரேஷ் என்பவர் பரபரப்பாக அஜித் பெயரை போட்டு போஸ்டர் ஓட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் அவர் கூறியிருப்பது, தான் மதுரை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக கட்சியின் பெயரை ‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ எனவும் மாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த போஸ்டரில் அஜித் மற்றும் எம்.ஜி.ஆர். படங்களையும் போட்டு உள்ளார்.

இது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது அவர் கூறியது, ஆமாங்க, அடுத்து தமிழகத்தின் முதல்வர் நம்ப அஜித் தான். ஏன் நம்ம தல அஜித் அரசியலுக்கு வரமாட்டாரா? அப்படி வந்தால் அவர் தான் வெற்றி பெறுவார். மேலும், திரையுலகின் ஜாம்பவான் தல அரசியலுக்கு வர மாட்டாரா என்ன? நாளை என்னவெல்லாம் நடக்குமென்று எங்கள் கட்சித் தலைவர் ராஜேந்திர பாலாஜி சொல்லி இருக்காரு.

இனி அதிமுக என்றாலே ‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ தான் பெயர் பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அஜித்தை பிடிக்கும். அதிமுகவும் அஜித்துக்கும் தொடர்பு ஏற்படும் என்று அவர் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஏற்கனவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபாடு இல்லை என்றும் ஆர்வம் இல்லை என்றும் கூறியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவும் அஜித்தின் பார்வைக்கு எட்டாமல் நடந்திருக்கும் ஒரு விசயமாகவே எண்ணப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: