உலக மக்களை நடுங்க வைக்கும் மிகவும் துரதிஷ்டமான எண்கள் எவை தெரியுமா?

0
679

மூடநம்பிக்கைகள் நிறைந்த உலகில் சில நம்பர்கள் மிகவும் துரதிஷ்டமானவை என கருதப்படுவதால் சிலர் அதனை பயன்படுத்துவதில்லை.

இதில், முதல் இடத்தில் இருப்பது நம்பர் 13.

நம்பர் 13 இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுடன் 13 ஆளாக சேர்ந்து அமர்ந்து உணவருந்தியுள்ளார். அதன்பின்னர் தான் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே உலகளவில் கிறிஸ்துவர்களை பொறுத்தவரை நம்பர் 13 என்பது துரதிஷ்டமான எண் என கருதப்படுகிறது,

இன்று வரை, பாரீஸ் கலாசாரத்தை பொறுத்தவரை நம்பர் 13 என்பது துரதிஷ்டமான எண் எனவே கருதுகிறார்கிறார்கள்.

இந்த நாளில் வீட்டை விட்டு செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்கமாட்டார்கள்.

நம்பர் 4 பெரும்பாலான ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவில், நம்பர் 4 மிகவும் துரதிஷ்டமான நம்பர் என கருதப்படுகிறது. ஏனென்றால், நம்பர் 4, இறப்பிற்கான ஒலியை குறிக்கிறது,எனவே இதனை அவர்கள் தவிர்க்கிறார்கள். சீனாவில் கட்டிடங்களின் 4 வது, 13 வது, 14 வது மற்றும் 24 வது மாடிகளைக் காண முடியாது.

நோக்கியா, சாம்சங், சோனி போன்ற பெரிய நிறுவனங்களும் கூட அவர்களது மொபைல் தயாரிப்பில் 4 வது தொடரைத் தவிர்க்கின்றன. உதாரணமாக, சோனி எக்ஸ்பீரியா Z3 + சோனி எக்ஸ்பீரியா Z4 க்கு பதிலாக தொடங்கப்பட்டது.

நம்பர் 24 ஜப்பான் நாட்டு மக்களை பொறுத்தவரை நம்பர் 24 என்பது மிகவும் துக்கமான மற்றும் ஆபத்தான நம்பர் ஆகும். மேலும் 43 ஆம் நம்பரையும் இவர்கள் துரதிஷ்டமாக கருதுகிறார்கள்.

நம்பர் 17 இந்தியர்களை பொறுத்தவரை 17 என்பது துரதிஷ்டமான நம்பர் ஆகும். (1+7=8). 8 என்பது சனி கிரகத்தால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு நம்பர் ஆகும்.

மேலும், இத்தாலி மக்களுக்கும் 17 நம்பர் துரதிஷ்டமானது, ரோமானிய எண்களின்படி, 17 என்பது XVII ஆகும். VIXI என்ற வார்த்தை, உங்களது வாழ்க்கை முடிந்துவிட்டது (My Life Is Over)என்பதை குறிக்கிறது.

நம்பர் 7 நம்பர் 7 என்பது இறந்துபோன ஆத்மாக்களை விடுவித்தல் என்பதை குறிக்கிறது, எனவே இதனை துரதிஷ்டான நம்பர் என கருதுகிறார்கள்.

மேலும் ஏனைய செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: