உலகை உலுக்கிய சம்பவம்!! ஒரே நாளில் 150 பேர் பலி…

0
303

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து ராணுவம் மேற்கொண்ட குண்டுவீச்சில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் மசூதியில் ஒன்றில் கூடிய போது அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறி தவறி மசூதியை அண்மித்துள்ள பாடசாலை மீது விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குண்டுவீச்சு நடந்தபோது பாடசாலையில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இடம்பெற்றதாகவும் அதில் கலந்து கொண்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 150 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தத்தாக்குதலில் 25 தீவிரவாதிகள் மாத்திரமே உயிரிழந்ததாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: