உலகில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் தெரியுமா?

0
479

மதச்சார்பற்ற சமுதாயம் வேண்டும் என்று நினைப்பது சுலபம். உண்மையில் உலகில் பெரும்பான்மையானோர் தங்கள் மதத்தினையே முன்னிறுத்திகின்றனர்.

உலகில் ஆயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும், மிகவும் பிரபலமான மதங்கள் சில உள்ளன. அந்த மதங்களில் உலகில் பெரும்பான்மையாக யார் இருக்கின்றனர் என்பதை கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் உலக மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியதில், முதல் ஐந்து இடங்களில் உள்ள மதங்களின் பட்டியலை தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவம்
உலகில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். 2.3 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மததத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக மக்கள் தொகையில் இவர்கள் 31.2 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்து கொண்டே வருவதாகவும், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சப் சகாரா ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லீம்

உலகில் இரண்டாவது மிகப் பெரிய மதம் என்றால் முஸ்லீம் மதம் தான், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதமாக பார்க்கபடும் இஸ்லாமிய மதத்தில் 1.8 பில்லியன் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். உலகில் 24 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர்.

எந்த மதமும் இல்லாதவர்கள்

உலகில் 1.20 பில்லியன் மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சரிவர அறிய முடியவில்லை. அவர்கள் தங்களை மதச் சார்பற்றவர், நாத்திகர்கள் என்று முன்னிலைப் படுத்திக் கொள்கின்றனரே தவிர வெளிப்படையாக தெரியவில்லை.

இந்துக்கள்

உலகின் 15 சதவீதம் பேர் இந்துக்கள். அதிகமாக ஆசிய பசிபிக் பகுதிகளிலே இந்துக்கள் அதிமாக காணப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் அதிகமாக உள்ளனர்

அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் சிறிய அளவிலே காணப்படுவதாகவும், ஆனால் 2060-ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மதக் குழுக்கள்

உலகில் 6.9 சதவீதம் பேர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பஹாய்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், தாவோயிஸ்டுகள் என பல சிறிய மதங்களில் 0.8 சதவீதமே உள்ளனர். இதில் ஆச்சரியமாக யூத மக்கள் 0.2 சதவீதம் பேர் உள்ளனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: