உலகின் வயதான பெண்மணி உயிரிழப்பு!

0
625

ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி நபி தஜிமா, தமது 117 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கஃகோஸிமாவின் ((Kagoshima)) கிகாய் ((Kikai)) என்ற இடத்தில் 1900 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி பிறந்த நபி தஜிமாதான் 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பெண் ஆவார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நபி தஜிமா,கடந்த சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஜிமாவுக்கு மகள், மகன், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரன்கள் என 160 பேர் உள்ளனர்.

இதற்குமுன் ஜமைக்காவைச் சேர்ந்த வயலெட் பிரௌன் (Violet Brown) என்பவர் கடந்த ஆண்டு 117ஆவது வயதில் உயிரிழந்தைத் தொடர்ந்து, உலகின் வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனை பட்டியலில் தஜிமா சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: