இன்று நள்ளிரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்!

0

இன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பேஸ்புக் மட்டுமின்றி அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியவையும் கோளாறில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரசிச்னை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்சினை பற்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 14.03.2019 வியாழக்கிழமை – Today Rasi Palan !
Next articleஇலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்? திணறும் பயனர்கள்!