உயிர் போகாததால் மனைவியின் கொடூரச் செயல்! கள்ளக்காதலனுடன் கணவனை கொல்ல முயற்சி!

0
224

தற்போது கள்ளக்காதல் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல பெண்கள் அபிராமியாக மாறி வருகின்றனர்.

கேரளாவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை மனைவி துடிக்க துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானுரைச் சேர்ந்தவர் சாகத். 34 வயதான இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 30 வயதில் சவுஜத் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 32 வயது பஷீருடன் கள்ளக்காதலில் விழுந்தார் சவுஜத்.

கணவர் வியாபாரத்திற்கு சென்றதும் கள்ளக்காதலுனுடன் போனிலும், நேரிலும் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் பஷீர் வெளிநாட்டுக்குச் சென்றதால் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் பஷீருடன் இணைந்து வாழ முடிவு செய்த சவுஜத் தனது கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அவரின் திட்டத்திற்கேற்ப பஷீரும் வெளிநாட்டிலிருந்து வரவே இரவோடு இரவோடு நண்பர்களுடன் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

நடுஇரவில் உள்ளே நுழைந்த பஷீர் சாகத்தின் தலையில் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார் சாகத். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று பஷீர் சென்றுவிடவே, பின்பு கணவன் துடிதுடித்து கிடப்பதை அவதானித்த மனைவி அவரை மீன் செட்டும் கத்தியால் தலையாக துண்டாக அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்பு எதுவும் தெரியாதது போல் பொலிசாரிடம் மர்மநபர்களால் தனது கணவர் கெலைசெய்யப்பட்டார் என்று புகார் கொடுத்துள்ளார் சவுஜத்.

இறுதியில் பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை நானே கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பஷீரின் நண்பரை கைது செய்த பொலிசார் தலைமறைவாகியுள்ள பஷீரை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: