உயிருக்கு உயிராக நேசித்த மகன்… பரிதாபமாக பறிகொடுத்த பிரபுதேவா!

0
592

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் கொடிகட்டி பறக்கிறார்.

இவர் உயிருக்கு உயிராக நேசித்த மகன் ஒருவர் இவரை விட்டு பிரிந்து சென்றதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல்வேறு சோதனைகளையும் தாண்டி இன்றும் சினிமாவில் சாதித்து வருகிறார்.

இவர் 1995ம் ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதில் மூத்த மகன் விஷால் எப்பொழுதும் பிரபுதேவாவிற்கு பிடித்த மகனாகவே இருந்து வந்துள்ளார்.

ஆனால் அவர்களின் பாசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்பது தான் வருத்தமான செய்தி. விஷால் திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போனதால் 2008ம் ஆண்டு டிசம்பம் 5ம் திகதி விஷால் இறந்துவிட்டார். இதனால் பிரபுதேவா மட்டுமின்றி அவரது குடும்பமும் சோகத்தில் காணப்பட்டனர்.

பிரபுதேவாவில் மகனின் உடலுக்கு விஜய், அஜித் என பல முன்னனி பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்பின்பு நாட்கள் செல்ல செல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: