உதவுவதாக கூறி பள்ளி மாணவியை சீரழிக்க முயன்ற வாலிபர்! சரமாறியாக அடித்து துவைத்த கிராம மக்கள்! வீடியோ!

0

இலங்கையில் கடந்த சில வருடங்களாகவே இளம்பெண்களை வலுக்கட்டாய பாலியல் துன்புறுத்தல் செய்யும் நிகழ்வானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் இருக்கும் திரிகோணமலை துவரங்காடு பகுதியில் இருக்கும் பள்ளி பயிலும் மனைவியை, அதே பகுதியை சார்ந்த நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்காக காட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஊர்மக்கள் ஒன்று கூடி, அந்த இளைஞரை சரமாறியாக அடித்து குறித்த மாணவியை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், சம்பவம் குறித்து ஊர் மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், மாணவியை அழைத்து சென்ற வாலிபர் மாணவியின் குடும்பத்தாருக்கு நன்கு தெரிந்த நபர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். திரிகோணமலை பகுதியில் உள்ள மஹாமாயபுரத்தை சார்ந்த அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் இல்லத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று வருவது வழக்கம். மேலும், நலிவடைந்த சிறுமியின் குடும்பத்திற்கு அவ்வப்போது சில உதவிகளை செய்து வழங்கியுள்ளார்.

அந்த வகையில், சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு செல்ல புறப்பட்டு தயாராக இருந்த சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளார்.

இவர்களின் வருகையை கவனித்த கிராம மக்கள் உடனடியாக அங்கிருந்த சிறுமியை மீட்டு, அந்த இளைஞரை அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசென்னைக்கு இதற்காக தான் வந்தோம்! வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்!
Next articleநீ என்னடா ஓவரா பேசுற! பிரபல நடிகரை தமிழில் தெறிக்கவிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!