உதவி செய்ய யாரும் வராததால் நடந்த சோகம்! கேரளா வெள்ளத்தில் நூறு பேரைக் காப்பாற்றிய இளைஞர்!

0
255

கேரளா மாநிலத்தில் பெருமழை பெய்த வெள்ளம் வந்தபோது சொந்த முயற்சியில் படகு அமர்த்தி, 100 பேரையும் குழுவாகச் சென்று 800-க்கும் மேற்பட்டோரையும் காப்பாற்றிய இளைஞர் ஜினீஷ் ஜிரோன் விபத்தில் சிக்கி கடந்த வாரம் பலியானார்.

ஆனால் விபத்தில் சிக்கி சாலையில் உயிருக்கு போராடிய போது உதவி செய்ய ஒருவர் கூட வரவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் செங்கனூர் அருகே பூந்துரா நகரைச் சேர்ந்தவர் ஜினீஷ் ஜிரோன். 24 வயதான ஜினீஷ் மீன்பிடித்தொழில் செய்து வரந்தார். கேரளாவில் பெருமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தபோது தனது சொந்த செலவில் படகு அமர்த்தி 100-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றினார். கோஸ்டல் வாரியர்ஸ் என்ற நண்பர்கள் குழு மூலம் வெள்ளத்தின் போது தீவிரமாக மீட்புப்பணி செய்து 800-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றினார்கள்.

சாலை விபத்தில் பலி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் செங்கனூர் அருகே பழைய உச்சகடா பகுதியில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார். ஆனால் லாரியில் அடிப்பட்டு இடுப்புப்பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார் ஆனால் உதவிக்கு ஏங்கியபோது சாலையில் சென்றவர்கள் மவுனமாகச் சென்றுள்ளனர்.

விபத்தில் சிக்கிய ஜினிஷ் மற்றும் நண்பர்
இதுகுறித்து ஜினீஷ் நண்பர் ஜெகன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த வெள்ளிக்கிழமை நானும், ஜினீஷும் தான் அவனுடைய பைக்கில் செங்கனூர் சென்றோம். நான்தான் பைக்கை ஓட்டினேன். அப்போது பைக் மீது ஒரு டிரக் உரசியபோது நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தோம். அப்போது ஜினீஷ் மீது லாரி ஏறிச் சென்றது. அப்போது இடுப்புப்பகுதியில் பலத்த காயமடைந்து ஜினீஷ் உயிருக்கு போராடினான். நானும் காயத்தால் அலறினேன்.

யாரும் உதவி செய்யவில்லை
ஆனால், சாலையில் சென்ற மக்கள் எங்களைப் பார்த்தவாறு சென்றனர் உதவி செய்ய வரவில்லை. அனைவருக்கும் உதவி செய்வதற்கு விரும்பும் ஜினீஷ்க்கு யாரும் உதவி செய்யவில்லையே எனக்கு அழுகை வந்தது. அதன்பின் நீண்டநேரத்துக்கு பின் ஆம்புலன்ஸ் வந்தது. ஜினீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: